Monday 16 May 2011

மனித செயல்களின் தீர்ப்பு எந்த அடிப்படையில் இருக்க வேண்டும்?

மனித செயல்களின் தீர்ப்பு எந்த அடிப்படையில் இருக்க வேண்டும்?
மனித செயல்களின் தீர்ப்பு எந்த அடிப்படையில் இருக்க வேண்டும்? என்பது பற்றிய பாடம் உசூலுல் பிக்ஹ்என்ற இஸ்லாமியக் கலையில் முக்கியமான ஒரு பாடமாகும்.
மனிதனின்  சகல செயற்பாடுகளும் இஸ்லாமிய ஷரீஆவின் (குர்ஆன்,சுன்னா) தீர்ப்பைப் பெற்றிருப்பது அவசியமாகும். ஏனெனில் முஸ்லிமின் செயல்களுக்கான அளவுகோள் அல்லாஹ்வின் ஏவலும் விலக்கலுமாகும்.
ஓவ்வொரு முஸ்லிமும், தான் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலையும் ஆழமாக அவதானித்து செய்வதை அல்லாஹ் கடமையாக்கியிருக்கிறான். தான் செய்யக்கூடிய செயல் பற்றிய இஸ்லாமிய மார்க்கத்தீர்ப்பைத் தெரியாமல் எந்தச் செயலைச் செய்வதற்கும் அல்லாஹ் அனுமதி தரவில்லை.
15:92     .உம் இறைவன் மீது ஆணையாக, நிச்சயமாக நாம் அவர்களனைவரையும் விசாரிப்போம்.
15:93    .அவர்கள் செய்து கொண்டிருந்த (எல்லாச்) செயல்களைப் பற்றியும், (நாம் விசாரிப்போம்).
10:61.    நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், ''குர்ஆனிலிருந்து நீங்கள் எதை ஓதினாலும், நீங்கள் எந்தக் காரியத்தை செய்தாலும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போது நாம் கவனிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உம் இறைவனுக்குத் (தெரியாமல்) மறைத்து விடுவதில்லை. இதை விடச் சிறயதாயினும் அல்லது பெரிதாயினும் விளக்கமான அவன் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை.
அல்லாஹ் கவனிக்காமல் இருப்பதில்லைஎன்பதன் கருத்து: அடியான் செய்யக்கூடிய செயல்கள் குறித்து அல்லாஹ் விசாரிப்பான், கேட்பான் என்பதாகும்.
சகாபாக்கள் எந்தக் காரியத்தை செய்வதற்கு முன்பதாகவும் அந்த செயல் பற்றிய மார்க்கத் தீர்ப்பை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளக் கூடியவர்களாகவே இருந்தார்கள்.
உதாரணமாக: அல்லாஹ்வின் தூதரே! சுற்றுலா செல்வதற்கு அனுமதி தருவீர்களா?’ ‘அல்லாஹ்வின் தூதரே! துறவறம் பூண அனுமதி தருவீர்களா?’ போன்ற கேள்விகள் மூலம்,ஒரு காரியத்தை செய்வதற்கு முன் அது பற்றிய மார்க்கத்தீர்ப்பை அறிந்து கொள்வது அவசியம் என்பதை அறிந்து அதன் படி சஹாபாக்கள் செயற்பட்டார்கள் என்பதைக் காண்கிறோம்.
இவற்றிலிருந்து  தெளிவாக விளங்க வேண்டிய விடயம் யாதெனில்..
மனிதனின்  சகல செயற்பாடுகளும் இஸ்லாமிய ஷரீஆவின்; (குர்ஆன்,சுன்னா)  தீர்ப்பைப் பெற்றிருப்பது அவசியமாகும்.
ஓவ்வொரு முஸ்லிமும், தான் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலையும் ஆழமாக குர்ஆனில் உள்ளதா? ஹதீஸில் உள்ளதா? என்பதை அவதானித்து செய்வது அவன் மீதுள்ள கட்டாயக் கடமையாகும்.
தான் செய்யக்கூடிய செயல் பற்றிய இஸ்லாமிய மார்க்கத்தீர்ப்பைத் தெரியாமல் எந்தச் செயலைச் செய்வதற்கும் அல்லாஹ் அனுமதி தரவில்லை.
எனவே, 27-02-2011 வரை லெஸ்டரின் தமிழ்; முஸ்லிம் சமூகத்தின் அங்கமாக இருந்து செயற்பட்டு வந்த ‘‘குர்ஆன், ‘ஹதீஸைத் தவிர எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்என்ற நல்ல கொள்கையோடு இருக்கின்ற (புர்கான் இஸ்லாமிய தாவா சங்கத்தின்)சகோதர்களிடமும் அவர்களுடைய ஆலிம்களிடமும் நாம் தாழ்மையாகக் கேட்டுக் கொள்வதெல்லாம் ..
உங்களின் தூய தக்வாவை அடிப்படையாகக் கொண்டும்..
உங்களின் தூய உழைப்பைக் கொண்டும்..
உங்களின் தூய சந்தாப் பணத்தைக் கொண்டும்..
கட்டப்பட்ட மஸ்ஜிதை விட்டும் சம்பூரணமாக வெளிநடப்;பு செய்த செயலுக்கான.
மார்க்கத் தீர்ப்பு என்ன? எனபதுவே.
பழைய பள்ளிவாசலுக்கு இருநூறு மீற்றர் தூரத்தில் புதிய பழைய பள்ளிவாசலை அமைப்பதற்கு ஆதாரமாக அமைந்த  குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்கள் என்ன? என்று தானே இன்று வரை கேட்கிறோம்..
தாயத்துக் கட்டுதல், தராவீஹ் தொழுதல், மௌலூது ஓதுதல்,கத்தம் ஓதுதல்,மத்ஹபைப் பின்பற்றுதல்,தாடியை சிரைத்தல்,மயிருக்கு நிறம் அடித்தல்,கெண்டைக் காலுக்கு மேல் டவுஸர் அணிதல், என எந்தச் செயல் தொடர்பாகவும் தெளிவான ஆதாரங்களைப் பார்த்த பின்பு தான்  அதனைப் பின்பற்றுவீர்கள்என்கின்ற இஸ்லாமியக் கொள்கை வாதிகளான நீங்கள், இது பற்றி (பழைய பள்ளிவாசலை புறக்கணித்ததும் புதிய பள்ளிவாயலை அமைத்ததும்)நேரடியாகவே பேசாததைக் கண்டு ஆச்சரியமாக உள்ளது.
இனியும் தாமதிக்காமல் நேரடியாகவே விடையளிப்பீர்கள் என நம்புகின்றோம்.
குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் இன்றி அமல் புரிவதை இஸ்லாமிய பரிபாஷையில் தக்லீத்கண்மூடித்தனமாக பின்பற்றுதல் என்பார்கள். இது பற்றிய எமது அடுத்த பாடத்தில் மீண்டும் சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்.
17-05-2011

No comments:

Post a Comment