தொல்லைப் பள்ளிவாசல் (மஸ்ஜிதுள் ளிரார்)
-------------------------------------------------------------
{ وَٱلَّذِينَ ٱتَّخَذُواْ مَسْجِداً ضِرَاراً وَكُفْراً وَتَفْرِيقاً بَيْنَ ٱلْمُؤْمِنِينَ وَإِرْصَاداً لِّمَنْ حَارَبَ ٱللَّهَ وَرَسُولَهُ مِن قَبْلُ وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلاَّ ٱلْحُسْنَىٰ وَٱللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ }
9:107. இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபன்னவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்; ''நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை"" என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்.
----------------------------------------------------------
{ لاَ تَقُمْ فِيهِ أَبَداً لَّمَسْجِدٌ أُسِّسَ عَلَى ٱلتَّقْوَىٰ مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُواْ وَٱللَّهُ يُحِبُّ ٱلْمُطَّهِّرِينَ }
9:108. ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது ஆங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.
--------------------------------------------------------------------------------
{ أَفَمَنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَىٰ تَقْوَىٰ مِنَ اللَّهِ وَرِضْوَانٍ خَيْرٌ أَم مَّنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَىٰ شَفَا جُرُفٍ هَارٍ فَٱنْهَارَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ وَٱللَّهُ لاَ يَهْدِي ٱلْقَوْمَ ٱلظَّالِمِينَ }
9:109. யார் மேலானவர்? பயபக்தியுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு கட்டடத்தின் அடிப்படையை அமைத்தவரா? அல்லது (தானே சரிந்துவிடக்கூடிய) பூமியை ஒட்டி அடிப்படையிட்டு (அந்த அடிப்படையில்) கட்டடத்தை - அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் (கட்டடத்தை அமைத்தவரா?) அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர் வழியில் நடத்த மாட்டான்.
--------------------------------------------------------------------------------
{ لاَ يَزَالُ بُنْيَانُهُمُ ٱلَّذِي بَنَوْاْ رِيبَةً فِي قُلُوبِهِمْ إِلاَّ أَن تَقَطَّعَ قُلُوبُهُمْ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ }
9:110. அவர்கள் எழுப்பிய அவர்களுடைய கட்டடம் (இடிக்கப்பட்டது); அவர்கள் உள்ளங்களிலே ஒருவடுவாக இருந்துக் கொண்டே இருக்கும். அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாக ஆகும்வரை (அதாவது மரணிக்கும் வரை) . அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானமிக்கவன்.
தொல்லைப் பள்ளிவாசல் (மஸ்ஜிதுள் ளிரார்)
--------------------------------------------------------------------------
(திருக்குர்ஆன் விரிவுரை: தப்ஸீர் இப்னு கஸீர் தமிழாக்கம்> பாகம் நான்கு> பக்கம் 397-399))
நயவஞ்சகர்கள் ‘குபா’ பள்ளிவாசலுக்கு அருகே (போட்டிப்) பள்ளி ஒன்றைக் கட்டலாயினர். அதை நன்கு உறுதியாகக் கட்டிய அவர்கள்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போருக்குப் புறப்படுவதற்கு முன்பாகவே கட்டுமான வேலையை முடித்து விட்டனர்.
பின்னர் அந்த நயவஞசகர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களிடம் வந்து, ‘(அல்லாஹ்வின் தூதரே) நீங்கள் எங்களிடம் வர வேண்டும்;: நாங்கள் கட்டியிருக்கும் பள்ளிவாசலில் தாங்கள் தொழ வேண்டும்: அவ்வாரு தாங்கள் தொழுவதன் மூலம் உங்கள் ஓப்புதலுக்கும் அங்கீகாரத்துக்கும் அதையே நாங்கள் சான்றாகக் கொள்வோம்’ என்றனர்.
அந்தப் பள்ளிவாசலைத் தங்களில் உள்ள பலவீனமானவர்களும் நோய் வாய்ப்பட்டவர்களும் குளிர் கால இரவுகளில் பயன்படுத்திக் கொள்வதற்குக் கட்டியதாகத் தெரிவித்தனர்.
ஆனால் அதில் தொழுவதிலிருந்து நபி(ஸல்) அவர்களை அல்லாஹ் பாதுகாத்து விட்டான். அப்போது நபி(ஸல்)அவர்கள் (அந்த நயவஞ்சகளிடம்) நாங்கள் (தற்போது) பயணத்தில் உள்ளோம்.(எனவே, இப்போது அங்கு தொழ வருவது இயலாது.) எனினும், நாங்கள் (பயணத்தை முடித்துவிட்டுத்) திரும்பும் போது (வேண்டுமானால்) அல்லாஹ் நாடினால் பார்க்கலாம்.’’ என்றார்கள்.
புpன்னர் நபி (ஸல்)அவர்கள் தபூக்கிலிருந்து மதீனாவை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்.அவர்களுக்கும் மதீனாவுக்கும் இடையே ஒரு நாள் பயணத் தொலைவு, அல்லது அதை விடக் குறைவான தூரம் தான் எஞ்சியிருந்தது.
அப்போது நபி(ஸல்) அவர்களிடம் (வானவர் தலைவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து (நயவஞ்சகர்கள் கட்டிய) அந்த ஊறு விளைவிக்கும் பள்ளிவாசல் (மஸ்ஜித் ளிரார்) தொடர்பான செய்தியை எடுத்துரைத்தார்கள்.
ஆந்த பள்ளிவாசலை நிறுவியவர்கள், இறை மறுப்பை வளர்க்க வேண்டும் என்றும், தொடக்க நாள் முதல் இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசலாகிய ‘குபா’ பள்ளிவாசலின் இறை நம்பிக்கையாளர்களிடையே பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்றும் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்கள்.
எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் மதீனா வந்து சேர்வதற்கு முன்னரே அந்தப்பள்ளிவாசலைத் தரைமட்டமாக்குவதற்காக அனுப்பி வைத்தார்கள்.
.----------------------------------------------------------------------------------------------------------------------------------
--அதில் ஒரு போதும் நிற்க வேண்டாம்---
அடுத்த வசனத்தில் (108)> ‘’(நபியே) நீர் அதில் ஒரு போதும் தொழுவதற்காக நிற்க வேண்டாம்.’’ என்று அல்லாஹ் கூறுகின்றான்.
இது நபி (ஸல்) அவர்களுக்கு இடப்பட்ட தடையுத்தரவாகும். நபி (ஸல்) அவர்களைத் தொடர்ந்து அவர்களுடைய சமுதாயத்தர்குக்கும் இந்தத் தடையுத்தரவு பொறுந்தும்.
ஆக> நபி(ஸல்)அவர்களுடைய சமுதாயத்தாரும் சரி> யாருமே ஒரு போதும் அந்தப் பள்ளி வாசலில் நின்று தொழலாகாது என்பது இதன் கருத்தாகும்.
(திருக்குர்ஆன் விரிவுரை: தப்ஸீர் இப்னு கஸீர் தமிழாக்கம் பாகம் நான்கு> பக்கம் 399).
No comments:
Post a Comment