ஏகத்துவம் என்றாலே பிரிவினைதானா?
‘-----------------இன்று தன்னை ஏகத்துவாதிகள் என தன்னைதானே அழைத்துக் கொள்பவர்களை பாருங்கள் பலர்தனது சொந்த தாய் தந்யைர்களையே கப்று வணங்கிகள் ஷிர்க்வாதிகள் என்று முத்திரை குத்தி அவர்களை ஒதுக்கி வாழ்கிறார்கள். சொந்த சகோதரர்களுடனேயே கை கலப்பில் ஈடுபடுகின்றனர். அதுமட்டு மல்ல அவர்களுக்குள்ளளேயே பல பிரிவுகளாக பிரிந்து ஊரையும் பல பிரிவுகளாக பிரி;த்து ஆளுக்கு ஒருபள்ளி அமைத்து தொழுது வருகிறார்கள்.--------------------‘
ஏகத்துவம் இந்த பெயரை கேட்டாலே பலரும் பயப்படுகின்றனர். ஏன் இந்தப்பயம்? இவர்கள் எங்குபோனாலும் அங்குபிரச்சினையும் சச்சரவும் தான் என்பது பெரும்பாலானோரின் மனப்பதிவு. இது உண்மையாகவும் இருக்கலாம். இதனை ஏகத்துவவாதிகள் என தன்னை அழைத்துக் கொள்ளும் அவர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். அவர்கள் இந்த பிரச்சினைக்களும் சச்சரவுகளும் வருவதற்கு காரணம் அவர்கள் உண்மையை சொல்வதால் தான் என்கிறார்கள். உண்மையை சொன்னால் குடும்பம்பிரியும் அண்ணண் தம்பிகளுக்கிடையில் பிரச்சினைகள் வரும் இதுவெல்லாம் இயல்புஎன்கிறார்கள். உண்மையில் இதன் உண்மை நிலையை நாம் ஆராய்ந்து பார்த்தால் அது பொய்யான ஒருகாரணம் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும் .நபியவர்களைவிட ஒரு பெரிய ஏகத்துவவாதி உலகில் இருக்கமுடியாது. அவரைப் போல ஒரு கொள்கைவாதி உலகில் இருக்க முடியாது. அப்படியிருக்க அவரின் பாட்டானார் இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணான கொள்கையை கொண்டவர். இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். நபியவர்கள் ஒருகாலமும் அவரது பாட்டனாரை கப்று வணங்கி ஷிர்கு வாதி என்று சொல்லி அவரை மனது புண்பட திட்டி அவரிடம் கோபம் கொண்டு அவரின் குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைக்கவில்லை. அவருக்கு அடித்து துண்புறுத்தவுமில்லை. அவரிடமிருந்து முகத்தை திருப்பிக் கொண்டு செல்லவுமில்லை. அவரின்பாட்டானார் எவ்வளவுதான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவராக இருந்தும் நபியவர்கள் தனது பெரிய தந்தை மேல் வைத்த அன்பை குறைக்கவில்லை அதே அன்புடன் தான் நபியவர்கள் இருந்தார்கள். இதனை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் இன்று தன்னை ஏகத்துவாதிகள் என தன்னைதானே அழைத்துக் கொள்பவர்களை பாருங்கள் பலர்தனது சொந்த தாய் தந்யைர்களையே கப்று வணங்கிகள் ஷிர்க்வாதிகள் என்று முத்திரை குத்தி அவர்களை ஒதுக்கி வாழ்கிறார்கள். சொந்த சகோதரர்களுடனேயே கை கலப்பில் ஈடுபடுகின்றனர். அதுமட்டு மல்ல அவர்களுக்குள்ளளேயே பல பிரிவுகளாக பிரிந்து ஊரையும் பல பிரிவுகளாக பிரி;த்து ஆளுக்கு ஒருபள்ளி அமைத்து தொழுது வருகிறார்கள். இதற்கு காரணம் கேட்டால் நாங்கள் ஷிஆக்கள் போலி ஒற்றுமை என்று வாதிகிறார்கள். அப்படியிருந்தால் நீங்கள் நபியவர்களின் பெரியதந்தையு;ன 'நபியவர்கள் நாகரீகமான அன்பாக நடந்து கொண்டதை என்னவென்று சொல்வீர்கள். உங்கள் தாய் தந்தையர்கள் சகோதரர்கள் அயலவர்கள் உங்கள் கொள்கைக்கு இஸ்லாத்துக்கு மாற்றமாக இருக்கலாம் அதற்காக அவர்களிடம் சண்டையிட்டு பலபிரிவுகளாக பிரிந்து வாழ்வதல்ல தீர்வு. அவர்கள் பிழை யென்று நாகரீகமாக சொல்வதுதான் உங்கள் கடமை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் அவர்களது உரிமை ஏற்றுக் கொண்டால் நல்லது இல்லாவிட்டால் அவர்களைவிட்டு பிரியவேண்டும் அவர்களை வீட்டை விட்டு துரத்த வேண்டும் அவர்களிடமிருந்து பிரிந்து வேறு பள்ளி கட்ட வேண்டுமென்றில்லை. நபியவர்கள் கஃபாவை 360 சிலைகள் சூழ்ந்து இருக்கும் போது கஃபாவில் தொழுதார்கள். வேறு கஃபா கட்டி தொழவில்லை. நபியவர்கள் முடிந்தவரை மற்றவர்களுடன் சமாதானமாக வாழவே முயற்சி செய்தார்கள். முடிந்தவரை தங்களுக்குள் அடித்துக் கொண்டு பிரிவதற்கு அல்ல. சகோதரர்களே இது சம்பந்தமாக எழுதிக் கொண்டே போகலாம். கொஞ்சம் சிந்தியுங்கள் நபியவர்கள் தனது பெரிய தந்தை எமது கொள்கைக்கு முழுமையாக முரணானவராக இருந்தும் நபியவர்கள் அவருடன் அன்பாக பழகினாரே தவிர அவரை ஒதுக்கவில்லை. எமதுகொள்கை; குமாறாக நமது உறவினர்கள் சகோதரர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களிடமிருந்து நாம்பிரிந்து ஒதுங்கி சண்டை பிடித்துத்தான் வாழவேண்டு மென்பதில்லை அவர்களுடன் அன்பாகவும் வாழலாம்.
By: Abdur Raheem Mohamed Inas
No comments:
Post a Comment