Showing posts with label Article. Show all posts
Showing posts with label Article. Show all posts

Monday, 16 May 2011

மனித செயல்களின் தீர்ப்பு எந்த அடிப்படையில் இருக்க வேண்டும்?

மனித செயல்களின் தீர்ப்பு எந்த அடிப்படையில் இருக்க வேண்டும்?
மனித செயல்களின் தீர்ப்பு எந்த அடிப்படையில் இருக்க வேண்டும்? என்பது பற்றிய பாடம் உசூலுல் பிக்ஹ்என்ற இஸ்லாமியக் கலையில் முக்கியமான ஒரு பாடமாகும்.
மனிதனின்  சகல செயற்பாடுகளும் இஸ்லாமிய ஷரீஆவின் (குர்ஆன்,சுன்னா) தீர்ப்பைப் பெற்றிருப்பது அவசியமாகும். ஏனெனில் முஸ்லிமின் செயல்களுக்கான அளவுகோள் அல்லாஹ்வின் ஏவலும் விலக்கலுமாகும்.
ஓவ்வொரு முஸ்லிமும், தான் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலையும் ஆழமாக அவதானித்து செய்வதை அல்லாஹ் கடமையாக்கியிருக்கிறான். தான் செய்யக்கூடிய செயல் பற்றிய இஸ்லாமிய மார்க்கத்தீர்ப்பைத் தெரியாமல் எந்தச் செயலைச் செய்வதற்கும் அல்லாஹ் அனுமதி தரவில்லை.
15:92     .உம் இறைவன் மீது ஆணையாக, நிச்சயமாக நாம் அவர்களனைவரையும் விசாரிப்போம்.
15:93    .அவர்கள் செய்து கொண்டிருந்த (எல்லாச்) செயல்களைப் பற்றியும், (நாம் விசாரிப்போம்).
10:61.    நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், ''குர்ஆனிலிருந்து நீங்கள் எதை ஓதினாலும், நீங்கள் எந்தக் காரியத்தை செய்தாலும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போது நாம் கவனிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உம் இறைவனுக்குத் (தெரியாமல்) மறைத்து விடுவதில்லை. இதை விடச் சிறயதாயினும் அல்லது பெரிதாயினும் விளக்கமான அவன் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை.
அல்லாஹ் கவனிக்காமல் இருப்பதில்லைஎன்பதன் கருத்து: அடியான் செய்யக்கூடிய செயல்கள் குறித்து அல்லாஹ் விசாரிப்பான், கேட்பான் என்பதாகும்.
சகாபாக்கள் எந்தக் காரியத்தை செய்வதற்கு முன்பதாகவும் அந்த செயல் பற்றிய மார்க்கத் தீர்ப்பை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளக் கூடியவர்களாகவே இருந்தார்கள்.
உதாரணமாக: அல்லாஹ்வின் தூதரே! சுற்றுலா செல்வதற்கு அனுமதி தருவீர்களா?’ ‘அல்லாஹ்வின் தூதரே! துறவறம் பூண அனுமதி தருவீர்களா?’ போன்ற கேள்விகள் மூலம்,ஒரு காரியத்தை செய்வதற்கு முன் அது பற்றிய மார்க்கத்தீர்ப்பை அறிந்து கொள்வது அவசியம் என்பதை அறிந்து அதன் படி சஹாபாக்கள் செயற்பட்டார்கள் என்பதைக் காண்கிறோம்.
இவற்றிலிருந்து  தெளிவாக விளங்க வேண்டிய விடயம் யாதெனில்..
மனிதனின்  சகல செயற்பாடுகளும் இஸ்லாமிய ஷரீஆவின்; (குர்ஆன்,சுன்னா)  தீர்ப்பைப் பெற்றிருப்பது அவசியமாகும்.
ஓவ்வொரு முஸ்லிமும், தான் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலையும் ஆழமாக குர்ஆனில் உள்ளதா? ஹதீஸில் உள்ளதா? என்பதை அவதானித்து செய்வது அவன் மீதுள்ள கட்டாயக் கடமையாகும்.
தான் செய்யக்கூடிய செயல் பற்றிய இஸ்லாமிய மார்க்கத்தீர்ப்பைத் தெரியாமல் எந்தச் செயலைச் செய்வதற்கும் அல்லாஹ் அனுமதி தரவில்லை.
எனவே, 27-02-2011 வரை லெஸ்டரின் தமிழ்; முஸ்லிம் சமூகத்தின் அங்கமாக இருந்து செயற்பட்டு வந்த ‘‘குர்ஆன், ‘ஹதீஸைத் தவிர எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்என்ற நல்ல கொள்கையோடு இருக்கின்ற (புர்கான் இஸ்லாமிய தாவா சங்கத்தின்)சகோதர்களிடமும் அவர்களுடைய ஆலிம்களிடமும் நாம் தாழ்மையாகக் கேட்டுக் கொள்வதெல்லாம் ..
உங்களின் தூய தக்வாவை அடிப்படையாகக் கொண்டும்..
உங்களின் தூய உழைப்பைக் கொண்டும்..
உங்களின் தூய சந்தாப் பணத்தைக் கொண்டும்..
கட்டப்பட்ட மஸ்ஜிதை விட்டும் சம்பூரணமாக வெளிநடப்;பு செய்த செயலுக்கான.
மார்க்கத் தீர்ப்பு என்ன? எனபதுவே.
பழைய பள்ளிவாசலுக்கு இருநூறு மீற்றர் தூரத்தில் புதிய பழைய பள்ளிவாசலை அமைப்பதற்கு ஆதாரமாக அமைந்த  குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்கள் என்ன? என்று தானே இன்று வரை கேட்கிறோம்..
தாயத்துக் கட்டுதல், தராவீஹ் தொழுதல், மௌலூது ஓதுதல்,கத்தம் ஓதுதல்,மத்ஹபைப் பின்பற்றுதல்,தாடியை சிரைத்தல்,மயிருக்கு நிறம் அடித்தல்,கெண்டைக் காலுக்கு மேல் டவுஸர் அணிதல், என எந்தச் செயல் தொடர்பாகவும் தெளிவான ஆதாரங்களைப் பார்த்த பின்பு தான்  அதனைப் பின்பற்றுவீர்கள்என்கின்ற இஸ்லாமியக் கொள்கை வாதிகளான நீங்கள், இது பற்றி (பழைய பள்ளிவாசலை புறக்கணித்ததும் புதிய பள்ளிவாயலை அமைத்ததும்)நேரடியாகவே பேசாததைக் கண்டு ஆச்சரியமாக உள்ளது.
இனியும் தாமதிக்காமல் நேரடியாகவே விடையளிப்பீர்கள் என நம்புகின்றோம்.
குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் இன்றி அமல் புரிவதை இஸ்லாமிய பரிபாஷையில் தக்லீத்கண்மூடித்தனமாக பின்பற்றுதல் என்பார்கள். இது பற்றிய எமது அடுத்த பாடத்தில் மீண்டும் சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்.
17-05-2011

Tuesday, 10 May 2011

இஸ்லாமிய மார்க்கத்தில் கருத்து வேறுபாடு இன்றும் அன்றும்

இஸ்லாமிய மார்க்கத்தில் கருத்து வேறுபாடு இன்றும் அன்றும்------------------------------------------------------------------------------------------------------------------
அன்று: இஸ்லாமிய மார்க்கத்தில் கருத்து வேறுபாடு என்பது சஹபாக்கள் முதல் இமாம்கள் காலம் வரை அதன் பிறகும் இருக்கத்தான் செய்தது. இந்த கருத்து வேறுபாடுகள் அவர்களின் அறிவுதர வேறுபாட்டலும் அவர்கள் அடைந்து கொண்ட கருத்தின் அடிப்படையில் ஏற்ப்பட்டதாகும்.
இப்படியான சுழலில் அவர்கள் கடைபிடித்த முறைகள் மிகவும் பயனுள்ளது நமக்கு படிப்பினை தரக்கூடியது.
அவர்களில் ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் கருத்துக்களை பின்பற்றி வந்தனர்
மற்ற கருத்துடையவர்களை வசைபாடி திரியவில்லை.
தாங்கள் மட்டும் தான் வஹியின் வெளிச்சத்தில் உள்ளவர்கள் மற்றவர்கள் வழிகேடர்கள் என்று யாரும் யாரையிம் அழைத்துக் கொள்ளவில்லை.
மாற்று கருத்துடையவரிடம் விவாத அழைப்பு கொடுத்து அவர்கள் யார் உண்மையாளர்கள் என்பதை அறிய விவாதங்கள் நடத்த வில்லை.
அவர்களுக்கு தெரியும் ஹலால் தெளிவானதே ஹராம் தெளிவானதே  இவை இரண்டுக்கும் மத்தியில் இருப்பதில் கருத்து வேறுபாடுகள் வருவது இயற்க்கையே.
எனவே அவர்கள் தங்களுக்கு கிடைத்த வழிகாட்டல் அடிப்படையில் தங்கள் செயல்களை அவர்களுக்கு கிடைத்த ஆதராங்கள் அடிப்படையில் அமைத்துக் கொண்டார்கள்.
அவர்கள் தெளிவான கட்டளைக்கு மத்தியில் தெளிவில்லாத விசயங்களை குளப்பிக் கொள்ளவில்லை.
தெளிவான கட்டளைக்கு முன் தெளிவில்லாத விசயங்களை கொண்டு வழி நடந்தது இல்லை.
அவர்கள் கருத்து வேறுபாடுகள் மத்தியில் தகவல் பரிமாற்றம் அடிப்பiயில் இணங்கிக் கொண்டனர்
இல்லையேல் அவர் அவர் செயல்களில் இணக்கம் கண்டனர்.
கருத்து வேறுபாhடுகள் விசயத்தில் அவர்களின் நிலைபாடாக கீழ் காண்பவை காண்கிறோம்,
----------------------------------------------------------------------------------------------------------------------
எங்களுக்கு கிடைத்த தகவல் மற்றும் நாங்கள் விளங்கிக் கொண்ட விதம் எங்களுக்கு சரியானதே, அல்லாஹ்விடத்தில் பிழையானதாகவும் இருக்கலாம்.
அவர்களுக்கு கிடைத்த தகவல் மற்றும் அவர்கள் விளங்கிக் கொண்ட விதம் அவர்களுக்கு சரியானதே, அல்லாஹ்விடத்தில் பிழையானதாகவும் இருக்கலாம். 4:59   يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنكُمْ  ۖ فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚ ذَٰلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.
இன்று
இஸ்லாமிய மார்க்கத்தில் கருத்து வேறுபாடுகள் அவர்களின் அறிவுதர வேறுபாட்டலும்,அவர்கள் அடைந்து கொண்ட கருத்தின் அடிப்படையில் ஏற்ப்படுவதாகும்.
இப்படியான சுழலில் நாம் கடைபிடித்த முறைகள் மிகவும் பயங்கரமானது நமக்கு அழிவை தரக்கூடியது.
நாம் இப்போது ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் கருத்துக்களை பின்பற்றி வந்தாலும் மற்ற கருத்துடையவர்களை வசைபாடி திரிகிறோம். தாங்கள் மட்டும் தான் வஹியின் வெளிச்சத்தில் உள்ளவர்கள் மற்றவர்கள் வழிகேடர்கள் என்று குழப்பவாதிகள் ஏமாற்று பேர்வழிகள் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள்.
மாற்று கருத்துடையவரிடம் விவாத அழைப்பு கொடுத்து யார் வஹியின் வெளிச்சத்தில் உள்ளவர்கள் என்பதை அறிய விவாதங்கள் நடத்து கிறோம். விவாத அழைப்பை ஏற்க்கவில்லையென்றால் அவர் ஓடிவிட்டர் என்றும் கீழ்தரமாகவும் விமர்ச்சிக்கிறோம் ஒருவரை ஒருவர் தாக்கி இரத்தத்தை ஓட்டுகிறோம் ஈமானிய சகோதரத்துவம் மறந்து. இயற்க்கை தன்மைக்கு மாற்றமாக தெளிவை தேடி அழைகிறோம். தெளிவான கட்டளைகள் இருக்க அதை பின்பற்றமல் அதற்க்கு மாற்றமான தெளிவில்லாத விசயங்களை கொண்டு தெளிவான கட்டளை புறக்கணிக்கிறோம், இவைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
எங்களுக்கு கிடைத்த தகவல் மற்றும் நாங்கள் விளங்கிக் கொண்ட விதம் தான் அல்லாஹ்வின் வஹி என்கிறார்கள் சிலர்.
3:102   يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும்,(அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.

3:105   وَلَا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا مِن بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ ۚ وَأُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ
(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு,மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.

8:46 وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ ۖ وَاصْبِرُوا ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள், என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்.
 எனக்குப் பின்னர், உங்களில் ஒருவர் மற்றவரின் பிடரியை
வெட்டிக்கொள்ளும் நிராகரிப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள். (புகாரி)

இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்,
 அல்லாஹ்வின் கரங்கள் கூட்டமைப்புடனேயே இருக்கும் யார் கூட்டமைப்பிலிருந்து தனிமைப்படுகிறாரோ அவர் தன்னை நரக நெருப்புக்குத் தனிமைப்படுத்திக் கொண்டவராவர் (திர்மதி)

61:4 إِنَّ اللَّهَ يُحِبُّ الَّذِينَ يُقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَفًّا كَأَنَّهُم بُنْيَانٌ مَّرْصُوصٌ
எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான்.

4:59   يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنكُمْ  ۖ فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚ ذَٰلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.

Sunday, 8 May 2011

தொல்லைப் பள்ளிவாசல் (மஸ்ஜிதுள் ளிரார்)

தொல்லைப் பள்ளிவாசல் (மஸ்ஜிதுள் ளிரார்)
-------------------------------------------------------------

{ وَٱلَّذِينَ ٱتَّخَذُواْ مَسْجِداً ضِرَاراً وَكُفْراً وَتَفْرِيقاً بَيْنَ ٱلْمُؤْمِنِينَ وَإِرْصَاداً لِّمَنْ حَارَبَ ٱللَّهَ وَرَسُولَهُ مِن قَبْلُ وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلاَّ ٱلْحُسْنَىٰ وَٱللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ }
9:107. இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபன்னவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்; ''நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை"" என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்.
----------------------------------------------------------
{ لاَ تَقُمْ فِيهِ أَبَداً لَّمَسْجِدٌ أُسِّسَ عَلَى ٱلتَّقْوَىٰ مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُواْ وَٱللَّهُ يُحِبُّ ٱلْمُطَّهِّرِينَ }
9:108. ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது ஆங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.
--------------------------------------------------------------------------------

{ أَفَمَنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَىٰ تَقْوَىٰ مِنَ اللَّهِ وَرِضْوَانٍ خَيْرٌ أَم مَّنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَىٰ شَفَا جُرُفٍ هَارٍ فَٱنْهَارَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ وَٱللَّهُ لاَ يَهْدِي ٱلْقَوْمَ ٱلظَّالِمِينَ }
9:109. யார் மேலானவர்? பயபக்தியுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு கட்டடத்தின் அடிப்படையை அமைத்தவரா? அல்லது (தானே சரிந்துவிடக்கூடிய) பூமியை ஒட்டி அடிப்படையிட்டு (அந்த அடிப்படையில்) கட்டடத்தை - அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் (கட்டடத்தை அமைத்தவரா?) அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர் வழியில் நடத்த மாட்டான்.
--------------------------------------------------------------------------------
{ لاَ يَزَالُ بُنْيَانُهُمُ ٱلَّذِي بَنَوْاْ رِيبَةً فِي قُلُوبِهِمْ إِلاَّ أَن تَقَطَّعَ قُلُوبُهُمْ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ }
9:110. அவர்கள் எழுப்பிய அவர்களுடைய கட்டடம் (இடிக்கப்பட்டது); அவர்கள் உள்ளங்களிலே ஒருவடுவாக இருந்துக் கொண்டே இருக்கும். அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாக ஆகும்வரை (அதாவது மரணிக்கும் வரை) . அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானமிக்கவன்.

தொல்லைப் பள்ளிவாசல் (மஸ்ஜிதுள் ளிரார்)
--------------------------------------------------------------------------
(திருக்குர்ஆன் விரிவுரை: தப்ஸீர் இப்னு கஸீர் தமிழாக்கம்> பாகம் நான்கு> பக்கம் 397-399))
நயவஞ்சகர்கள் ‘குபா’ பள்ளிவாசலுக்கு அருகே (போட்டிப்) பள்ளி ஒன்றைக் கட்டலாயினர். அதை நன்கு உறுதியாகக் கட்டிய அவர்கள்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போருக்குப் புறப்படுவதற்கு முன்பாகவே கட்டுமான வேலையை முடித்து விட்டனர்.
பின்னர் அந்த நயவஞசகர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களிடம் வந்து, ‘(அல்லாஹ்வின் தூதரே) நீங்கள் எங்களிடம் வர வேண்டும்;: நாங்கள் கட்டியிருக்கும் பள்ளிவாசலில் தாங்கள் தொழ வேண்டும்: அவ்வாரு தாங்கள் தொழுவதன் மூலம் உங்கள் ஓப்புதலுக்கும் அங்கீகாரத்துக்கும் அதையே நாங்கள் சான்றாகக் கொள்வோம்’ என்றனர்.
அந்தப் பள்ளிவாசலைத் தங்களில் உள்ள பலவீனமானவர்களும் நோய் வாய்ப்பட்டவர்களும் குளிர் கால இரவுகளில் பயன்படுத்திக் கொள்வதற்குக் கட்டியதாகத் தெரிவித்தனர்.
ஆனால் அதில் தொழுவதிலிருந்து நபி(ஸல்) அவர்களை அல்லாஹ் பாதுகாத்து விட்டான். அப்போது நபி(ஸல்)அவர்கள் (அந்த நயவஞ்சகளிடம்) நாங்கள் (தற்போது) பயணத்தில் உள்ளோம்.(எனவே, இப்போது அங்கு தொழ வருவது இயலாது.) எனினும், நாங்கள் (பயணத்தை முடித்துவிட்டுத்) திரும்பும் போது (வேண்டுமானால்) அல்லாஹ் நாடினால் பார்க்கலாம்.’’ என்றார்கள்.
புpன்னர் நபி (ஸல்)அவர்கள் தபூக்கிலிருந்து மதீனாவை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்.அவர்களுக்கும் மதீனாவுக்கும் இடையே ஒரு நாள் பயணத் தொலைவு, அல்லது அதை விடக் குறைவான தூரம் தான் எஞ்சியிருந்தது.
அப்போது நபி(ஸல்) அவர்களிடம் (வானவர் தலைவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து (நயவஞ்சகர்கள் கட்டிய) அந்த ஊறு விளைவிக்கும் பள்ளிவாசல் (மஸ்ஜித் ளிரார்) தொடர்பான செய்தியை எடுத்துரைத்தார்கள்.
ஆந்த பள்ளிவாசலை நிறுவியவர்கள், இறை மறுப்பை வளர்க்க வேண்டும் என்றும், தொடக்க நாள் முதல் இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசலாகிய ‘குபா’ பள்ளிவாசலின் இறை நம்பிக்கையாளர்களிடையே பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்றும் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்கள்.
எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் மதீனா வந்து சேர்வதற்கு முன்னரே அந்தப்பள்ளிவாசலைத் தரைமட்டமாக்குவதற்காக அனுப்பி வைத்தார்கள்.
.----------------------------------------------------------------------------------------------------------------------------------
--அதில் ஒரு போதும் நிற்க வேண்டாம்---
அடுத்த வசனத்தில் (108)> ‘’(நபியே) நீர் அதில் ஒரு போதும் தொழுவதற்காக நிற்க வேண்டாம்.’’ என்று அல்லாஹ் கூறுகின்றான்.
இது நபி (ஸல்) அவர்களுக்கு இடப்பட்ட தடையுத்தரவாகும். நபி (ஸல்) அவர்களைத் தொடர்ந்து அவர்களுடைய சமுதாயத்தர்குக்கும் இந்தத் தடையுத்தரவு பொறுந்தும்.
ஆக> நபி(ஸல்)அவர்களுடைய சமுதாயத்தாரும் சரி> யாருமே ஒரு போதும் அந்தப் பள்ளி வாசலில் நின்று தொழலாகாது என்பது இதன் கருத்தாகும்.
(திருக்குர்ஆன் விரிவுரை: தப்ஸீர் இப்னு கஸீர் தமிழாக்கம் பாகம் நான்கு> பக்கம் 399).