குத்பா உரை:
(அல் இஉதிஸாம்) பற்றிப்பிடித்தல், தஞ்சம் அடைதல்
(அல் இஸ்மது): தீமையில் வீழ்வதிலிருந்து அடியானை அல்லாஹ் காப்பதை இது குறிக்கும்.
(அன் னபிய்யூன மஉச+மூன்) நபிமார்கள் பாவங்களிலிருந்து காக்கப்பட்டவர்கள் என்பது நபிமார்களுக்கு இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்றாகும்.
(இஉதஸம (ல் அப்து) பில்லாஹ்);: அடியான் அல்லாஹ்விடம் பாதுகாப்பு வேண்டினான்.தஞ்சம் புகுந்தான்.
(அல் இஉதிஸாமு பில் கிதாபி வஸ்ஸ{ன்னா)அல்லாஹ்வின் மூலம் உதவியைப் பெறுவதிலும் அவன் மீது நம்பிக்கை வைப்பதிலும் அவனை விட்டும் பிரிந்து செல்வதில்லை என்பதிலும் முஸ்லிம்கள் ஒன்றுபடுவதையும்; ஐக்கியப்படுவதையும் குறிக்கும்.
(அல் இஉதிஸாம்) பற்றிப்பிடித்தல், வகைகள்:
இப்னுல் கையிம்: இரண்டு வகை என்கிறார்.
1. அல் இஉதிஸாம் பில்லாஹ்:
3:101 .அவனுடைய ரஸ_ல் உங்களிடையே இருந்து கொண்டு; - அல்லாஹ்வின் ஆயத்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கக்கூடிய (நிலையில்) இருந்து கொண்டு, நீங்கள் எவ்வாறு நிராகரிப்பீர்கள்? மேலும், எவர் அல்லாஹ்வை (அவன் மார்க்கத்தை) வலுவாகப் பற்றிக் கொள்கிறாரோ, அவர் நிச்சயமாக நேர்வழியில் செலுத்தப்பட்டுவிட்டார்.
4:145 .நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித் தலத்தில்தான் இருப்பார்கள்;. அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காண மாட்டீர்.
________________________________________
4:146. யார் மன்னிப்புக் கேட்டு சீர்திருந்தி, அல்லாஹ்வை (தம் நற்செய்கைகள் மூலம்) கெட்டியாகப் பிடித்து, தங்களுடைய சன்மார்க்கத்தை அல்லாஹ்வுக்காகத் தூய்மையாக்கியும் கொண்டார்களோ அவர்கள் முஃமின்களுடன் இருப்பார்கள்;. மேலும் அல்லாஹ் முஃமின்களுக்கு மகத்தான நற்கூலியை அளிப்பான்.
4:174 .மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு (உறுதியான) அத்தாட்சி வந்து விட்டது. தெளிவான பேரொளியையும் உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம்.
________________________________________
4:175. ஆகவே, யார் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, அவ(ன் அருளிய நேர் வழியி)னை பலமாகப் பிடித்துக் கொள்கிறார்களோ, அவர்களைத் தன் ரஹமத்திலும், அருளிலும் புகச் செய்கிறான்;. இன்னும் தன்னிடம் (அவர்கள் வந்து) சேரக்கூடிய நேரான வழியிலும் அவர்களைச் செலுத்துவான
2. (அல் இஉதிஸாம்) பிஹப்லில்லாஹ்:
3:102 .நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.
________________________________________
3:103 .இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;.
நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.
மேற்படி இரண்டு பண்புகளின் மீதே ஈருலக மகிழ்ச்சி தங்கியுள்ளது.
மேற்படி இரண்டு பண்புகளையும் பற்றிக் கொள்ளாத வரை வெற்றி இல்லை.
• (அல் இஉதிஸாம்) பிஹப்லில்லாஹ்: வழிகேட்டை(ளளாலத்) விட்டும் காத்துக் கொள்ளல்
• அல் இஉதிஸாம் பில்லாஹ்: அழிவிலிருந்து(ஹலாக்) காத்துக் கொள்ளல்
உதாரணமாக அல்லாஹ்வை நோக்கி நடப்பவன் குறித்த இலக்கை நோக்கி நடப்பவனைப் போன்றே
1. நேரான வழியைத் தெரிந்திருக்க வேண்டும்.
2. வழியில் பாதுகாப்பும் மற்றும் கட்டுச் சாதனங்களும் இருக்க வேண்டும்.
இரண்டும் இல்லாமல் இலக்கை அடைய முடியாது.
குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் வழிகேட்டிலிருந்து காத்து நேர் வழி காட்டப் போதுமானவை பிஹப்லில்லாஹ் இங்கு தேவைப்படுகின்றது.
சாதனங்களும் சக்தியும் ஆற்றலும் ஆயுதமும்,பயணத்துக்கு அவசியம்.
மேலும் பாதையில் உள்ள வழிப் பறிக் கொள்ளை போன்ற தீங்கிலிருந்து பாதுகாப்பும் அவசியம் .
அல் இஉதிஸாம் பில்லாஹ் இங்கு தேவைப்படுகிறது.
மேற்படி இரு அம்சத்தையும் அழகாக அறிந்திருந்த ஸலபுஸ் ஸாலிஹ_ன்கள் ஹப்லுல்லாஹ் பற்றி கூறும் கூற்றுகள்;
கதாதா, அஸ்ஸ{த்தீ மற்றும் பல தப்ஸீர் அறிஞர்கள்: அல் குர்ஆன் என்றனர்.
இப்னு அப்பாஸ்;: அல்லாஹ்வின் தீனை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.
இப்னு மஸ்ஊத்: ‘அது ஜமாஅத்’ஃ ஜமாஅத்துடன் இருப்பது உங்கள் மீது கடமையாகும், அல்லாஹ் கட்டளை பிறப்பித்த அவனது கயிறு என்பது ஜமாஅத்தே. பிளவுண்டிருப்பதில் (பிர்கா) நீங்கள் விரும்புகின்றவற்றை விட கூட்டாக இருப்பதில் (ஜமாஅத்தில்) நீங்கள் வெறுக்கின்றவை சிறந்ததாகும்.
முஜாஹித்,அதாஉ: (பி அஹ்தில்லாஹ்) அல்லாஹ்வுடனான தொடர்பு, பிணைப்பு, உடண்படிக்கை என்கிறார்.
முகாதில்: அல்லாஹ்வின் ஏவலும் அவனுக்கு கட்டுப்படுவதும் யூத கிரிஸ்த்தவர்கள் பிளவு பட்டது போல் பிரிந்து விடாமல் இருப்பதுமாகும் என்றார்.
ஸாஹிபுல் மனாஸில்: அல்லாஹ்வின் கட்டளையை கவனமாக பேணுவதன் மூலம் தொடர்ந்தும் அவனுக்குப்பூரணமாக க் கட்டுப்படுவது..
அல் இஉதிஸாம் பில்லாஹ் என்பது:
அல்லாஹ்வின் மீது (தவக்குல் வைப்பது) பொறுப்புச்சாட்டுவது, அவனிடத்திலே பாதுகாப்பை வேண்டுவது.
இஉதிதிஸாமின் பலனாக அடியானுக்குப் பாதுகாப்புக் கிடைக்கும்.
அல்லாஹ்வை விசுவாசம் கொண்ட அடியானைப் அவன் பாதுகாக்கிறான்.
சுந்தேகங்கள், இச்சைகள் ஆகியவற்றிலிருந்து காக்கிறான்.
பகிரங்கமான இரகசியமான எதிரியின் சதியிலிருந்து காக்கிறான்.
தனக்குத் தானே புரியும் தீங்கிலிருந்தும் காக்கிறான்.
அல் இஉதிஸாமின் பலத்துக்கு ஏற்ப தீமைகளின் பால் இட்டுச் செல்லும் காரணங்களிலிருந்தும் காக்கின்றான்.
சகோதரத்துவ பிணைப்பு (உகுவ்வா )முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகவும் பலவீனம் அடைந்து விட்டது.
நெறுக்கமான நட்புறவு (வலாஉ) மிக மிக மோசமாகி விட்டது.
இதற்கான காரணம்:
முஸ்லிம்களுக்கு மத்தியில் உள்ள பிளவுகளாகும்.
சகோதரத்துவம் நட்பு ஆகியவற்றின் அடிப்படையாக இருப்பது ஈமானே. சகோதரத்துவம் நட்பு ஆகியவற்றின் அடிப்படையாக, தான் சார்ந்துள்ள கூட்டம் இயக்கம் கட்சி ஆகியன வரவே கூடாது.இந்த நிலை மிகத் தெளிவான வழிகேடாகும்.
கவனிக்க வேண்டிய விpடயங்கள்.
1.நம்பிக்கையின் அடிப்படையில் சகோதரர்களாக கருதப்படும் முஸ்லிம் சமூகத்திலிருந்து எந்த முஸ்லிமும் பிரியக் கூடாது.அனைவருமாக பெரும் சுமையை சுமப்பது போன்று, பல கருத்துக்கள் இருந்தாலும் பெரும் சுமையை சுமத்தல் என்பதில் நாம் ஒன்று படுவது போல் ஏக சமூகம் என்ற அடிப்படையில் பரஸ்பரம் உபதேசித்துக் கொண்டு பொறுமையோடு சமூகப்பணி செய்யப்பட வேண்டும். பிரிவதற்கு அல்லாஹ் அனுமதியைத் தரவில்லை.
2.நாம் தான் நல்ல கூட்டம் என்று கூறிக் கொண்டாலும் ;. பிரிவதற்கு அல்லாஹ் அனுமதியைத் தர வில்லை.
3.அல் இஸ்லாஹ்(சீர் திருத்தம்) என்ற பணி முஸ்லிம்களிடம் செய்யப்படுவது கடமை.பிரிந்து செல்ல அனுமதியில்லை
இயக்க பேதம் இருந்தாலும் முஸ்லிம் சமூகம் ஒரு சமூகமே.
Written by As-sheikh Mohamed Ismail -Naleemi-
No comments:
Post a Comment