சகோதரத்துவம்
49:10. நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்
ஒரு முஸ்லிம் மற்றைய முஸ்லிமின் சகோதரனாவான்.
எனவே அம்முஸ்லிம் அடுத்த முஸ்லிமுக்கு அநீதியிழைக்க மாட்டான்.
அவனைக் கைவிட மாட்டான்.
அவனிடம் பொய்யுரைக்க மாட்டான்.
அவனை இழிவாகக் கருத மாட்டான்.
''இறையச்சம் இங்கே உள்ளது"" என்று மூன்று தடவைகள் தனது நெஞ்சைத் தொட்டுக் காட்டிய நபியவர்கள் தொடர்ந்தும் கூறினார்கள்.
ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமை இழிவுபடுத்துவதே அவன் தண்டனை பெறுவதற்கு போதுமான தீய செயலாகும்.
ஒவ்வொரு முஸ்லிமின் இரத்தமும் உடமையும் மானமும் அடுத்த முஸ்லிமின் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது.
அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த நபிமொழி இமாம் முஸ்லிம் அவர்களின் பதிவாகும்.
பிற முஸ்லிமுக்கு எத்தகையதொரு அநீதியையும் இழைக்காமல் அவனுக்கு உதவி தேவைப்படும் சந்தர்ப்பத்தில் அவனை கைவிட்டு விடாமல், அவ்விடம் பொய்யுரைக்காமல், அவனை இழிவாகக் கருதாமல் இணக்கப்பாட்டுடனும் ஒத்துழைப்புடனும் வாழ வேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது.

சகோதரர்களே!
அல்லாஹ்வின் அருளால் இங்கே இந்த மஸ்ஜிதில் நாம் அனைவரும் ஒன்று சேர்;துள்ளோம்.
நாம் அனைவரும் உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் ஒரு பகுதியினரே.
நாம் பல ஊர்களையும் பிரதேசங்களையும் நாடுகளையும் தேசியங்களையும் நிறங்களையும் மொழிகளையும் பிரதிநிதித்துவம் செய்கின்றோம்.
இஸ்லாமிய வாழ்வு முறையை எமது வாழ்வில் சம்பூரணமாக கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தோடு சமூகத்திலே உழைத்து வருகின்ற இயக்கங்களின் அமைப்புக்களின் இஸ்லாமிய சிந்தனைப்பிரிவுகளின் பிரதி நிதிகளாகவும் இருக்கின்றோம்.
பேதங்கள் இருந்தாலும் ஈமானிய,இஸ்லாமிய சகோதரர்கள் என்ற அடிப்படையில் இணைந்து செயற்படுகின்றோம்.இந்த சகோதரத்துவத்தையே இஸ்லாம் விரும்புகின்றது. இந்த நிலை எமது மரணம் வரையும் கியாம நாள் வரும் வரை தொடர்வதற்கு அல்லாஹ் அருள்புரிவானாக.
எல்லாம் வல்ல அல்லாஹ் மிக அழகான இஸ்லாமிய வாழ்க்கை முறையை நமக்குத் தந்தான். இந்த வாழ்வை வாழத் தெறியாமல் உலகெங்கும் முஸ்லிம்கள் மோதிக் கொண்டும் போராடிக் கொண்டும் சீரழிவது ஒரு புறம்.
ஆட்சியாளர்கள் தமது இலாபத்துக்காக முஸ்லிம் பொதுமக்களை சித்திரவதைகள் செய்வதும் கொலைகள் செய்வதும் மற்றொரு புறம்.
நிச்சியமாக முஸ்லிம்களை சிறுமைப் படுத்துகின்ற,முஸ்லிம் சமூகத்தைக் கூறு போடுகின்ற இந்தப் மோதல்கள், பிளவுகள்,போராட்டங்கள், யாவும் நிற, மொழி, தேசிய வாதம் மற்றும் இயக்க வாதங்களின் உற்பத்திகளே அன்றி வேறில்லை.
இந்த மாதிரி பிரிந்து பிளவு பட்டு வாழ்வதற்கான வழிகாட்டலை ஒரு போதும் இஸ்லாம் போதிக்கவில்லை.
‘நிச்சியமாக உங்களின் சமூகம் ஒரேயொரு சமூகமே.நானே உங்களின் இரட்சகன் எனவே என்னையே வணங்குங்கள்’

எனவே எமக்கு மத்தியில் காணப்படுகின்ற சகோதரத்துவத்தைப் பாதிக்கும் விடயங்களை அறிந்து அதனை விட்டும் தவிர்ந்து கொள்வதும், சகோதரத்துவத்தை வளர்க்கின்ற விடயங்களை அறிந்து அதனை பொறுமையோடு செய்து வருவதும் எம்மீதுள்ள கடமையாகும்.
நபிகளாரின் சமூகத்தைப் பாருங்கள்.
இன,நிற, மொழி,கோத்திர, தேசிய பேதங்களைத் தாண்டி ஒரே சகோதரத்துவ சமூகமாக அது இருந்தது.
நபிகளாரின் காலம் மாத்திரமல்ல.பல நூற்றாண்டு கால இஸ்லாமிய வரலாற்றைப்படிக்கின்ற போதும் தெளிவாக அறிந்து கொள்ள முடியுமான விடயம் யாதெனின்:பேதங்கள் பல இருந்தாலும் ஒற்றுமை சாத்தியம் என்பதாகும்.

சகோதரத்துவம் என்பது எமது நம்பிக்கைக் கோட்பாட்டை ஏற்று எம்மோடும் அந்த நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளக்கூடியவர்களோடு அன்பு பாசம், மதிப்பு மரியாதை, நீதி நேர்மை,விட்டுக் கொடுப்பு மன்னிப்பு ஆகிய அம்சங்களை உள்ளத் தூய்மையோடு பகிர்ந்து கொள்வதாகும். இன,மொழி, நிற, பிரதேச,தேசிய, வகுப்பு, இயக்க பேதங்கள் அனைத்தையும் தாண்டி ஈமானால் ஒன்று பட்டவர்கள் என்ற சகோதரத்துவ வாஞ்சையோடு அடுத்த சகோதரனோடு பழகுவதாகும்.
அடிப்படைகள் சில உண்டு
1. விசுவாசம்:சகோதரத்துவம், அன்பு என்பது விசுவாசம் கொள்வதால் வருவதாகும்.
تحابو حتي لاتؤمنو முஸ்லிம்.
2. அல்லாஹ்வுக்காக அன்பு கொள்வது,

3. அல்லாஹ்வின் அருளின்றி உள்ளங்கள் சேராது. பிணையாது.
8:63 وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ ۚ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَّا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَٰكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ ۚ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ
8:63. மேலும்இ (முஃமின்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அன்பின்) பிணைப்பை உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்த போதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்; மெய்யாகவே அவன் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
சகோதரத்துவத்துக்கு சவாலாக அமைகின்ற மனோநிலைகள் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நீங்கள் ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்ள வேண்டாம்.
ஒருவருக்கொருவர் போட்டியாக விலைகளை உயர்த்திக் கேட்க வேண்டாம்.
ஒருவரையொருவர் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
ஒருவரையொருவர் புறக்கணித்து நடக்க வேண்டாம்.
உங்களில் சிலர் இன்னும் சிலரது வியாபாரத்திற்கெதிராக வியாபாரம் செய்ய வேண்டாம். அல்லாஹ்வின் அடியார்களாகிய நீங்கள் சகோதரர்களாகி விடுங்கள்.
பொறாமை கொள்ளல்பொதுவாக பொறாமை என்பது, ஒருவர் தன்னிடம் இல்லாத பிறரிடம் காணப்படும் ஏதேனுமொரு அல்லாஹ்வின் அருள் அவரை விட்டும் நீங்கி தனக்குக் கிட்ட வேண்டுமென்றோ அல்லது வேறு யாருக்காவது கிடைக்க வேண்டுமென்றோ எண்ணுவதைக் குறிக்கும்.
இத்தகைய மனோநிலை மனிதனிலே காணப்படும் மிகவும் இழிவான பண்பாகும். தன்னைவிட அடுத்தவன் சிறப்புக்களை, உயர்வுகளை அடைந்து விடக் கூடாது என்ற எண்ணத்தின் விளைவே பொறாமை உணர்வாக வெளிப்படுகிறது. இதனை இஸ்லாம் தடை செய்துள்ளது.

வியாபாரப் போட்டி
பொருளை வாங்கும் எண்ணமின்றி அப்பொருளின் விலையை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் அதன் விலையை கூடுதலாக கேட்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது. சந்தையில் ஏலத்துக்காக விடப்பட்டுள்ள பொருட்களை கொள்வனவு செய்யும் போது இத்தகைய நிலைமைகள் ஏற்படலாம். இதனை இஸ்லாம் தடை செய்துள்ளது.
இங்கு வந்துள்ள ''லா தனாஜஷ{"" என்பது சூழ்ச்சி, ஏமாற்று, தந்திரம் போன்றவற்றில் ஈடுபடாதீர்கள் எனும் கருத்திலும் விளக்கப்பட முடியும்.

பகைமையுணர்வு
தனது சகோதர முஸ்லிமுடன் அன்புடனும் நேசத்துடனுமேயே உறவுகளை அமைத்துக் கொள்ள வேண்டுமென இஸ்லாம் முஸ்லிம்களுக்கு பணிக்கிறது. ஒருவருக்கொருவர் பகைமையுணர்வை ஏற்படுத்திக் கொள்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக
அஸ்மா பின்த் யஸீத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ''உங்களிலே மோசமானவர்களை நான் அறிவிக்கட்டுமா?"" என நபியவர்கள் வினவ ஸஹாபாக்கள் ''ஆம், அல்லாஹ்வின் தூதரே"" என்றனர். ''புறம் பேசித் திரிபவர்கள், நேசம் கொண்டோரிடையே பிரிவினையை ஏற்படுத்துவோர், நிரபராதிகளுக்கு குற்றம் சுமத்த விரும்புவோர்"" எனக் கூறினார்கள்.

சகோதர முஸ்லிமைப் புறக்கணித்து நடத்தல்
சகோதரத்துவத்தைப் பாதிக்கும் மற்றொரு அம்சமான சகோதர முஸ்லிமைப் புறக்கணித்து நடப்பதனை இஸ்லாம் தடை செய்துள்ளது. ஒருவரையொருவர் புறக்கணித் பரஸ்பரம் உறவுகளைத் துண்டித்துக் கொள்வதனை இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள். ''நீங்கள் பரஸ்பரம் பொறாமை கொள்ளாதீர்கள். பகைமை கொள்ளாதீர்கள். உறவுகளைத் துண்டித்துக் கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளவாறு அல்லாஹ்வின் அடியார்களாகிய நீங்கள் சகோதரர்களாக இருங்கள். (ஆதாரம் :முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ''ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமை மூன்று நாட்களுக்கு மேலாக புறக்கணித் நடக்கலாகாது. அவர்களில் ஒவ்வொருவரும் அடுத்தவரை சந்தித்தும் புறக்கணித்துச் செல்கின்றனர். இந்நிலையில் இருவரில் முதலில் ஸலாம் சொல்பவரே சிறந்தவர். (ஆதாரம் : புகாரீ,முஸ்லிம்);
இந்த ஹதீஸின் அடுத்த அம்சம் நபியவர்கள் நேரடியாகவே ''சகோதரர்களாக இருங்கள்"" எனும் கருத்தைக் குறிப்பிடுகிறார்கள். அல்லாஹ்வின் அடியார்களாகிய உங்களுக்கு மத்தியில் பொறாமை, பகைமையுணர்வு, தந்திரம், மோசடி, புறக்கணிப்பு என்பவற்றை நீக்கிக் கொள்வதனூடாக உண்மையான சகோதரப் பிணைப்பை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்ற கருத்தையே இதன் பின்னணியில் எமக்கு புரிந்து கொள்ள முடிகிறது.
சகோதரத்துவ உறவுக்குத் தடையாக இருக்கும் மேற்கூறப்பட்ட அம்சங்களை தவிர்ந்துகொண்டு, தனது சக முஸ்லிமுடைய உரிமைகளைப் பேணி வாழுகின்ற போது சகோதரத்துவ உணர்வு பலமடைகின்றது.

''எனது அடியார்களே! அநீதியிழைப்பதனை எனக்கு நான் ஹராமாக்கிக் கொண்டேன்.
அதனை நான் உங்களுக்கும் தடை செய்து விட்டேன். எனவே நீங்கள் உங்களில் ஒருவருக்கொருவர் அநீதியிழைத்துக் கொள்ளாதீர்கள்""
என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம்)
தனது சகோதர முஸ்லிமை அவனுக்கு உதவ வேண்டிய சந்தர்ப்பத்தில் கைவிட்டு விடுவதை இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது.
''ஒரு முஸ்லிம் இழிவுபடுத்தப்படும் போது அவனுக்கு உதவி செய்யும் சக்தியிருந்தும் உதவி செய்யாதவனை மறுமையில் அல்லாஹ் படைப்பினங்கள் அனைத்திற்கும் முன்னால் இழிவுபடுத்தி விடுவான்"". ஆதாரம் : முஸ்னத் அஹ்மத்)

தனது சகோதரனிடம் பொய்யுரைப்பது பாவமாகும். இதனைப் பின்வரும் நபிமொழி குறிப்பிடுகிறது. ''உனது சகோதரன் உன்னை நம்பிய நிலையில் அவனுக்கு நீ பொய்யாக ஒரு செய்தியைக் கூறுவது மிகப் பெரும் மோசடியாகும்"" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்னத் அஹ்மத்)
இறுதியாக இந்த ஹதீஸ் மனிதர்களை அளவிடும் சரியான அளவுகோள் எது என்பதை உணர்த்துகின்றது. உண்மையில் இந்த உலகின் சொத்துச் செல்வங்களையோ, கோத்திர, குல உயர்வுகளையோ அடிப்படையாகக் கொண்டு மனிதர்களைத் தரப்படுத்தி நோக்குவது தவறானது. அல்லாஹ்வை தக்வா செய்து வாழும் மனிதனே மிகவும் உயர்ந்தவன். தக்வா என்பது அல்லாஹ்வுடைய ஏவல்களை ஏற்று விலக்கல்களைத் தவிர்த்து வாழும் வாழ்க்கையமைப்பைப் பேணும் நிலையைக் குறிக்கும்.
மற்றும், இந்த ஹதீஸ் ஒரு முஸ்லிமின் உயிர், உடமை, மானம் என்பவற்றை உத்தரவாதப்படுத்துகிறது. இவற்றில் அத்துமீறி பங்கம் ஏற்படுத்துவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. இவை பொதுவான மனித உரிமைகளாகும்.

எப்படி சகோதரத்துவத்தை ஏற்படுத்துவது?
• தூய்மையான உள்ளம் வேண்டும். இக்லாஸ் என்போம்.
يؤمن احدكم حتي يحب لاخيه ما يحب لنفسه لا
தனக்கு விரும்புவதை தனது சகோதரனுக்கு விரும்ப வேண்டும்.
தனது ஊருக்கு விரும்புவதை பிற ஊருக்கு விரும்ப வேண்டும்.
தனது பாடசாலைக்கு விரும்புவதை..
தனது மத்ரஸாவுக்கு விரும்புவதை..
தனது பள்ளிவாசலுக்கு விரும்புவதை.. பிறவற்றுக்கும் விரும்புவது கடமையாகும்.

• தியாக மனம்பாங்கு வேண்டும்.
1.விருந்தாளிக்கு தான் பசித்திருக்க உணவைப் பரிமாறியது.
2.யர்மூக் யுத்தத்தில் மூவர் தனது சகோதரனை முற்படுத்தி நீரை அருந்தக் கொடுத்தமை.
• அன்பு காட்ட வேண்டும்.
• 3:159 فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ ۖ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ ۖ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ َ
3:159. அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும்இ கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால்இ அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிரஇ சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்;

• மன்னிக்கும் மனம் வேண்டும்.
فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ
1. ஹம்ஸாவின் இதயத்தைப் பிளந்து துப்பிய ஹின்தாவை மன்னித்தமை.
2. உஹதின் போது பள்ளத்தாக்கைப் பாதுகாக்க ;விடப்பட்டோர் கனீமத்தைப் பெற சென்றார்கள். தோல்விக்கு காரணமாகி விட்டது..மன்னித்தார்கள்.
3. நபிகளார் மக்காவை முற்றுகையிடும் எண்ணத்தை எழுத்து மூலம் தனது குறைஷிகளுக்கு அறிவிக்க நாடிய சஹாபியின் கடிதம் கிடைத்ததும் அவரை மன்னித்தமை.
4. ஹ{ஸைன்(ரழி)யின் கொலைக்குக் காரணமாக இருந்த யஸீத் இன் பின்னால் பல பெறும் சகாபாக்கள் போராடியது.
புடிப்பினை சமூகத்தை சகாபாக்கள் கூறு போடவில்லை..கூறு போடுவதற்கு தகுந்த காரணம் என நமது மனோ இச்சை கூறலாம்.
சகாபாக்கள் இப்படித் தான் விளங்கினார்கள்.

சகோதரத்துவம் என்பது ஈமானிய சகோதரத்துவமே..
எனவே தான் முஉமினைப் பற்றி கூறும் போது
1.ஏக உடலைப் போல..
2.ஒன்றோடு ஒன்று சேர்த்து கட்டப்பட்ட கட்டிடத்தைப் போல..

சகோதரத்துவும் பிரிந்து செயற்படுவதற்கல்ல.
அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிக் கொள்ளுங்கள்..பிரிந்து விடாதீர்கள்..

சமூகத்தில் இருந்து கொண்டுதான் சகோதரத்துவம் பேணப்படவேண்டும்.
1. நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பது நல்ல சமூகத்தின் பணியாகும்

2. பரஸ்பரம் உபதேசித்துக் கொள்வதும் பொறுமை காப்பதும் நட்டம் அடையாதிருக்க வழியாகும்.
3. சமூகம் தரும் கரச்சல்களோடுதான் பணி நடக்க வேண்டும்.
அப்துல்லாஹ் ப்னு உமர் நபிகளார் கூறியதாக அறியத் தருகிறார்கள்:
மக்களுடன் பழகி அவர்களால் ஏற்படும் தீங்குகளைச் சகித்துக் கொள்ளும் அடியான்,
மக்களுடன் பழகாத அல்லது அவர்களால் ஏற்படும் தீங்குகளை சகித்துக் கொள்ளாத அடியானை விட சிறந்தவர் ஆவார். (திர்மிதி, இப்நு மாஜா)

Written by As-sheikh.Mohamed Ismail -Naleemi-
No comments:
Post a Comment